Skip to main content

‘தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை’ - தலைமை காஜி அறிவிப்பு!

Published on 30/03/2025 | Edited on 30/03/2025

 

Chief Qazi announces Ramzan festival tomorrow in Tamil Nadu

தமிழகத்தில் நாளை (31.03.2025) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை ஹாஜி ஹாஜி சலாவுதின் முகமது அறிவித்துள்ளார். இன்று (30.03.2025) பிறை தென்பட்டதால் தமிழகம் முழுவதும் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஹிஜ்ரி 1446 ரமலான் மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 30-03-2025ஆம் தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்பட்டது. ஆகையால் திங்கட்கிழமை ஆங்கில மாதம் 31-03-2025ஆம் தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப் படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் பித்ர்  திங்கட்கிழமை (31-03-2025) தேதி கொண்டாடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்