உலக மக்கள் பட்டினி இல்லாத மக்களாக மாற்றவேண்டும் என்ற நோக்கில் உலக பட்டினி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் எனத் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டது.
ஏழை எளியவர்களின் பசியைப் போக்கும் வகையில் வேலூர் மாநகர் பழைய பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுமார் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், வடை, மற்றும் மதிய உணவாக வெஜ் பிரியாணி, தயிர் சாதம், சாம்பார், சாதம், லெமன் சாதாம் ஆகியவை வேலூர் மாவட்ட தலைவர் வேல் முருகன் தலைமையில் வழங்கப்பட்டது.
மேலும் வேலூர் மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் 1000 த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஆம்பூர் ரயில் நிலையம் அருகாமையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் முனுசாமி தலைமையில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்