Skip to main content

வேலைகொடு அல்லது கருணைக்கொலை செய்- மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

திருவல்லிக்கேணியில் உள்ள வேலைவாய்ப்பு மையத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக மாற்றுத்திறனாளிகள் போராட்டதில்  ஈடுபட்டு வருகின்றனர்.

 

2014-ஆம் ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பட்டதாரி கூட்டமைப்பு சார்பாக இந்த போராட்டம் இன்றுடன் சேர்ந்து கடந்த நான்கு நாட்களாக நடந்து வருகின்றது.

 

JOB

 

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் தமிழகத்தின் அனைத்து மாவட்டதிலிருந்தும் 400 மாற்றுத்திறனாளிகள் தேர்வில் வெற்றிபெற்று வேலைவாய்ப்பிற்கு தகுதி பெற்றனர். ஆனால் 2014-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் வெற்றிபெற்றும் தற்போது வரை பணியிடங்கள் நிரப்பப்படாததால் மாற்றுத்திறனாளிகள் சார்பாக முதல்வர் வீட்டிற்கே சென்று மனு அளிக்க முயன்றும் இறுதியில் முடியாமல் முதல்வர் வீட்டின் வாட்ச்மேனிடம் மனுவை கொடுத்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக அதிகாரிகளை சந்தித்தும் எந்த பலனும் இல்லை. 

 

சிறப்பு ஆசிரியர்களுக்கான பணியிடங்களை அரசு நிரப்பவேண்டும் இல்லையெனில் அடுத்த தகுதித்தேர்வின் பொழுது தற்பொழுது தங்கள் எழுதி வெற்றிபெற்ற பணியிடம்  தகுதிநீக்கமாகி திரும்பவும் தேர்வு நடத்தப்படும் இதனால் வெற்றிபெற்ற நாங்கள் வஞ்சிக்கப்படுவோம் என கூறி திருவல்லிக்கேணி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தகுதி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை கொடுத்திடு அல்லது எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் என்ற கோஷங்களை எழுப்பி  கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.   

சார்ந்த செய்திகள்