Skip to main content

எதற்காக அவசர செயற்குழு கூட்டம்? மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Published on 10/08/2018 | Edited on 10/08/2018


மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை இன்று காலை நேரில் சென்று மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொது குழு, மாநில சுயாட்சி மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த சந்திப்பை தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் 14.08.2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும் என்றும் இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

 

 

இந்த அறிவிப்பு திமுகவினர் மத்தியில் மிக முக்கிய அறிவிப்பாக பார்கப்பட்டது. ஏனெனில், திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு பின் நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதர்பார்ப்பை எழுப்பியது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,

திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கவே இந்த அவசார செயற்குழு கூட்டம். கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்