



Published on 08/03/2022 | Edited on 08/03/2022
மதிமுக சார்பில், இன்று உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு மாநில மகளிர் அணி செயலாளர் ரோஹையா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் கே. கழகக்குமார், சைதை சுப்ரமணியன், மாவை மகேந்திரன், டி.சி ராஜேந்திரன் மற்றும் மல்லிகா தயாளன், தென்றல் நிசார் ஆகியோர் இருந்தனர். மேலும், மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவும் இருந்தார்.