Skip to main content

வேப்பூரில் பெண்ணிடம் தாலி கொடி திருட்டு

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
வேப்பூரில் பெண்ணிடம் தாலி கொடி திருட்டு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள திருப்பயர் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மருதை மனைவி அகிலாண்டம் (வயது 50).  இவர் காட்டில் களையெடுத்து கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க தாலிகொடியை பறித்து கொண்டு மர்ம மனிதர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் விருத்தாசலம் ரோட்டில்  அதிவேகமாக சென்று விட்டனர். அலறியடித்து வந்த அகிலாண்டம் கொடுத்த தகவலின் படி வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வேப்பூர் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி  நடந்து கொண்டிப்பது குறிப்பிடதக்கதாகும்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்