பெங்களூரில் பெண் பத்திரிகையாளர்
சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து
புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்
பெங்களூரில் பெண் பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலை இலக்கிய பெருமன்றம், முற்போக்கு எழுத்தாள்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெங்களூரு பத்திரிகையாளர் கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்ற மதவாத சக்திகளை கண்டித்தும், பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல் மற்றும் கொலை வெறிச்செயல்களை கண்டித்தும், பத்திரிக்கையாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் மத்திய , மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர் .
- சுந்தரபாண்டியன்