Skip to main content

காவிரி நீர் பாசனத்திற்கு பாயுமா? கடலுக்கு போகுமா?

Published on 24/07/2018 | Edited on 24/07/2018


ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை அதன் கொள்ளலவான 120 அடியை தொட்டிருக்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களே காவிரி தண்ணீரை எதிர்ப்பார்த்து இருந்த நிலையில், கடந்த 19ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது.

ஆரம்பத்தில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் 30 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்டது.

காவிரி தண்ணீர் கரை புறண்டு வருவதால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என விவசாயிகள் விவசாய பணிகளை துவங்க உள்ளனர். இந்த சூழ்நிலையில் காவிரி தண்ணீர் கடைமடை வரை செல்லுமா என்கிற ஐயம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

 

 

இது குறித்து விவசாய சங்க பிரமுகர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், "இன்றைய நிலமையில் திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கு கடைமடை வரை போகாது. மாறாக காவிரி, கொள்ளிடம் வழியாக கடலுக்குத் தான் போகும். அதற்கு அரசின் அலட்சியமே காரணம், ஓவ்வொரு ஆறு, வாய்க்கால், குளம், ஏரிகள் என தாமதமாக வேலை துவங்கி கட்டுமானப் பணிகள் நடக்கிறது. தற்போதைய நிலவரப்படி 30% பணிகள் கூட முடியல. இம்மாத துவக்கத்தில் பணிகளை துவக்கி விட்டு, 19ம் தேதி தண்ணீரையும் திறந்து விட்டுட்டாங்க.

உதாரணமா கல்லணை திறக்கப்பட்டு, 3 நாட்களில் கடைமடையான பூம்புகார், காட்டூர், வேதாரன்யம் என கடல் பகுதிகளுக்கு வந்திடனும், ஆனா வரல காரணம் இடையிடையே நடக்கும் கட்டுமான பணிகள். தண்ணீர் திறக்கப்பட்டதும் டெல்டா மாவட்டங்களில் மழையும் பெய்யத் துவங்கிவிட்டது. பணிகளை அறைகுறையாக முடிக்க ஆயத்தமாகிவிட்டனர். ஒதுக்கப்பட்ட 300 கோடி ஸ்வாகா வா போயிடுச்சி.

ஆக அதிகாரிகள் அக்கறையோடு தண்ணீரை கடலுக்கு அனுப்பாமல் ஒவ்வொரு குளம் குட்டைகளில் நிரப்பினால் நிலத்தடி நீர் உயரும். இல்லையென்றால் போராடி பெற்ற தண்ணீர் கடலுக்குத் தான் போகும்," என்றார் கவலையுடன்.

சார்ந்த செய்திகள்