காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நீலகிரியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும், வனத்துறை உடனடியாக காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி கோரஞ்சால் பகுதியைச் சேர்ந்தவர் குமார். மாற்றுத்திறனாளி இளைஞரான இவர் மாலை வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று குமாரை தாக்கியது. இதில் யானை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்; சோரம்பாடி பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமாரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.