விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் 10 லட்சம் மதிப்பிலான சாராயம், பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் வாகன சோதனையில் சிக்கியது.
திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் படி நேற்று அதிகாலை 5 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினராகிய திருவெண்ணைநல்லூர் உதவி ஆய்வாளர் செல்வநாயகம், எடைக்கல் உதவி ஆய்வாளர் அகிலன் மற்றும் எலவனாசூர்கோட்டை உதவி ஆய்வாளர் மாணிக்கம், முதல் நிலை காவலர் மதுரை வீரன் ஆகியோர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அரசூரில் இருந்து பண்ருட்டி மார்க்காமாக சந்தேகத்திற்கிடமாக சென்ற டெம்போ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 30 பிளாஸ்டிக் கேன்களில் 15000 லிட்டர் சாராயமும் 4800 பாண்டிசேரியை சேர்ந்த மதுபாட்டில்களும் பிளாஸ்டிக் கவரில் 80 லிட்டர் எரிசாராயமும் இருந்ததது கண்டுபிடிக்கபட்டது.
அதிர்ச்சி அடைந்த போலீசார் விழுப்புரத்தை சேர்ந்த வாகன ஓட்டுநர் அசோக்(25) என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் விலை சுமார் 10 லட்சமாகும்.