![az](http://image.nakkheeran.in/cdn/farfuture/JA9yV22kBSQ0O8hWjlM0FHL9l-1578801xMEA_JzuEE/1536603720/sites/default/files/inline-images/azhagudurai%20and%20jayamani%20copy.jpg)
மனிதமனம் எத்தனை பலவீனமாக இருக்கிறது. அதனால்தான், சின்ன பிரச்சனைக்கும் உயிரை விடுகிறார்கள். கொலை செய்யவும் துணிந்து விடுகின்றனர். தேனி மாவட்டம் – கம்பத்திலும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
![m](http://image.nakkheeran.in/cdn/farfuture/XM7GSKnivDSmguO8T3CB_o8qZMstuz5U9BJys8ssbkA/1536603786/sites/default/files/inline-images/moovarin%20sadalangal%20copy.jpg)
கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாகப் பணிபுரிகிறார் அழகுதுரை. இவருக்கு ஜெயமணி என்ற மனைவியும், தேஜாஸ்ரீ என்ற மகளும், காசி விஸ்வநாதன் என்ற மகனும் உள்ளனர். அழகுதுரை காவல் பணியை முடித்துவிட்டு, 7-வது வார்டு சமயன் தெருவில் உள்ள தன் வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டியிருந்தது. சந்தேகம் ஏற்பட்டு, பூட்டை உடைத்து அவர் வீட்டுக்குள் நுழைந்தபோது, மனைவி, மகன், மகள் என மூவரும் பிணமாகக் கிடந்தனர்.
புது வீடு கட்டுவது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே தகராறாம். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஜெயமணி, மகனையும் மளையும் வீட்டில் உள்ள 4 அடி உயர தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு, தானும் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
![kam](http://image.nakkheeran.in/cdn/farfuture/EeAOeATO11BvSREJCvSmcn0Agl6tnJWgOI_7rjUHRk8/1536603812/sites/default/files/inline-images/kampam_0.jpg)
உத்தமபாளையம் டி.எஸ்.பி. சீமைச்சாமி, கம்பம் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் உலகநாதன், தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தி, அழகுதுரையின் வீட்டுக்கு சென்று, சடலங்களை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு சின்ன பிரச்சனைக்காக, குழந்தைகளைக் கொன்று, தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவசர முடிவு எடுத்துவிட்டார் ஜெயமணி.