Skip to main content

ஆட்டோவில் பயணிகளுக்கு வைஃபை, செய்தித்தாள் வசதி... ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து டி.ஜி.பி. பாராட்டு!

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

Wi-Fi, newspaper facility for passengers boarding the auto ... Call the auto driver in person and contact the DGP. Congratulations!

 

ஆட்டோவில் ஏறும் பயணிகளுக்கு வைஃபை, செய்தித்தாள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ள ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து தமிழக டி.ஜி.பி. பாராட்டு தெரிவித்தார். 

 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த அண்ணாதுரை 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். தனது ஆட்டோவில் வைஃபை, செய்தித்தாள்கள், வார இதழ்கள், சிறிய குளிர்சாதன பெட்டி, குழந்தைகளுக்கு சாக்லேட், குடை என பல வசதிகளை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார். மேலும், வாடிக்கையாளர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெறுகிறார். 

 

இதனையறிந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அண்ணாதுரையை நேரடியாக ஆட்டோவுடன் சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வரவழைத்தார். அதைத் தொடர்ந்து, அவரது ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து, ஆட்டோவில் உள்ள வசதிகளைப் பார்த்து வியந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபு, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையைப் பாராட்டினார். மேலும், ஆட்டோ ஓட்டுநரான அண்ணாதுரை, டி.ஜி.பி.யின் காலில் விழுந்து ஆசிப் பெற்றார். 

 

சார்ந்த செய்திகள்