Skip to main content

எதையும் தாங்கும் இதயம் இதைத் தாங்காதா?-ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!!

Published on 28/08/2018 | Edited on 28/08/2018

 

stalin

 

 

 

இன்று (28-08-2018) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏகோபித்த ஆதரவோடு தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் உரையாற்றிய போது பேசுகையில்,

 

நான் சிறுவனாக இருந்த போது பேரறிஞர் அண்ணாவின் குரலை மேடை அருகே ஒலி வாங்கி பிடித்து, பதிவு செய்து கொண்ட போது நான் மேடையேறிப் பேசுவேன் என்று கனவில் கூட எண்ணியதில்லை.

 

நான் இளைஞனாக இருந்த போது, நம் தலைவர் கட்சி நடத்தும் ஆற்றலை தூரத்தில் இருந்து பார்த்து வியந்து கொண்டிருந்த போது, என்றோ ஒரு நாள் இந்தக் கட்சியின் தலைமை ஏற்பேன் என்று ஒருநாளும் எண்ணியதில்லை.

 

அவர் இல்லாத எங்கள் கோபாலபுரம் வீட்டை, அவர் இல்லாத இந்த அறிவாலயத்தை, அவர் இல்லாத இந்த மேடையை கனவில் கூட நாம் கண்டதில்லை.

 

இத்தனை பெரிய பொறுப்பை, 50 ஆண்டு வரலாற்றை என் சிறிய இதயத்தில் ஏற்றி வைத்துவிட்டு, நம்முடைய தலைவர் ஓய்வெடுக்கச் சென்று விட்டார் என்று இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

 

என்னுள் துடிக்கும் இதயம் அவர் தந்தது. அவர் அண்ணாவிடம் வாங்கிய இதயம் அது. எதையும் தாங்கும் இதயம் இதைத் தாங்காதா?

 

என் கடைசி மூச்சு உள்ளவரை, என் கடைசி இதயத் துடிப்பு இருக்கின்ற வரை, என் உயிரினும் மேலான தமிழினமே உனக்காக நான் உழைப்பேன். உனக்காக நான் போராடுவேன் என்ற உறுதிமொழியுடன் விடை பெறுகிறேன் எனப்பேசினார்.

 

சார்ந்த செய்திகள்