ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக, சுயேச்சைகள் என அனைத்து வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோட்டில் நடந்த பரப்புரைக்கு பின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''சொன்ன வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. இதை கூட்டணிக் கட்சிகளாக இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அதை கண்டித்து அறிக்கை விடவில்லை. அவர்களை கண்டித்து கேட்பதற்கு திராணியில்லாமல் மவுனம் காப்பது ஏன்? உண்மையிலேயே அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யாமல் கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் இன்றைக்கு கூட்டணிக் கட்சிகள் இருக்கிறார்கள்''என்றார்.