ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 தமிழர்கள் விடுதலை ஆளுநரிடம் பரிசீலனையில் உள்ளதால் அவர்தான் முடிவெடுக்க வேண்டும் தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் இனி நீதிமன்றத்தின் பணி இருக்காது. இதில் தமிழக ஆளுநர் மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராபர்ட் பயாஸ்,ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தனர். சுமார் 8 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த வழக்கில், 7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தில் ஆளுநரிடம் நிலுவையில் உள்ள தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து அறிய மற்றும் அனுப்பப்பட்ட தீர்மானத்தில் ஆளுநர் அலுவலகம் என்ன முடிவு எடுக்கிறது என்று கேட்டு அறிந்து தெரிவிக்க இரண்டுவராம் அவகாசம் வேண்டும் என தமிழக அரசு கேட்டதை தொடர்ந்து வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.