Published on 03/08/2021 | Edited on 03/08/2021

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவப்பட திறப்பு விழா சட்டப்பேரவையில் நேற்று (02.08.2021) நடைபெற்றது. குடியரசுத் தலைவர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். இந்த விழாவில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். பாஜக சார்பாக அண்ணாமலை கலந்துகொண்டார். ஆனால் அதிமுக இந்நிகழ்ச்சியைப் புறக்கணித்தது. இந்நிலையில், இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "நான் முதல்வரின் விருப்பப்படி எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசி விழாவுக்கு வர அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர், தான் வரவில்லை என்று சட்டப்பேரவை செயலாளரிடம் தெரிவித்துள்ளார். நாங்கள் முறையாக அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை" என்றார்.