
3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு மதுரை அரசு மருத்துவமனை அருகே 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் நேரில் சென்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்த திட்டமிட்ட படுகொலையை நிகழ்த்திய அனைவரின் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை இங்குள்ள காவல்துறையினர் கையாள்வதில் மக்களுக்கு விருப்பமில்லை. ஏனெனில் அது சட்டத்துக்கு புறம்பானதாக அமையும்.
மக்களும் நீதி கிடைக்காது என வருத்தம் தெரிவிக்கின்றனர். அதில் நீதி கிடைக்காததற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். ஒவ்வொரு உரிமையையும் போராடி தான் பெற வேண்டும், அதன்படி நான் போராட்ட களத்திற்கு வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.