புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தில் தேரடி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நிழற்குடையில் செவ்வாய் கிழமை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடு என்றும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி அரசு நிவாரணம் வழங்க வேண்டும். போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகை கட்டப்பட்டு கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நகரம் கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், நிவாரணம் வழங்க கோரியும் பதாகை வைத்து கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்த தகவல் கீரமங்கலம் போலிசாருக்கு தெரிந்து நிழற்குடையில் கட்டப்பட்டிருந்த பதாகைளை அகற்றி எடுத்துச் சென்றனர். கருப்புக் கொடிகள் நிழற்குடையில் கட்டப்பட்டி நிலையில் இருந்தது.
இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது..
உயிர்கொல்லியான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் நிவாரணம் கேட்டு போராடும் மக்கள் மீது போடப்படும் வழக்குகளை போலிசார் திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகை கட்டப்பட்டதுடன் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. ஆனால் போலிசார் பதாகையை அகற்றினார்கள். கருப்பு கொடி பறந்து கொண்டிருக்கிறது என்றனர்.