மேட்டூர் கரையோர மக்களுக்கும், மீனவர்களுக்கும் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டூர் அணைக்கு மிக அதிக அளவில் நீர்வரத்து வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது மேட்டூர் அணை 60 அடியை தொட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூரில் கரையோரம் வசிக்கும் மக்கள், மீனவர்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், விவசாயிகள் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும். பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. வெள்ளம் தொடர்பான உதவிக்கு 1077 என்ற அவரச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ள மாவட்ட ஆட்சியர்.
மேட்டூர் அணைப் பகுதிகளில் இறங்கி குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.