Skip to main content

''வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு, அபகரிப்பால் கைவிட்டு போகிறது''-வக்ஃபு வாரிய தலைவர் எம்.அப்துல் ரஹ்மான்

Published on 12/02/2023 | Edited on 12/02/2023

 

"Waqf properties are abandoned due to encroachment and expropriation" - Waqf Board Chairman M. Abdul Rahman

 

சிதம்பரத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு மற்றும் மேஜர் ஜி.முஸ்தபாகமால் வழங்கிய அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் உயிர் காக்கும்  ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ''வக்ஃப் சொத்துக்கள் இரண்டு வகைகளில் கைவிட்டு போகின்றது. ஒன்று ஆக்கிரமிப்பு, இன்னொன்று  அபகரிப்பு என கைவிட்டு போய் உள்ளது. நிலத்தை விற்பவரோ வாங்குவோரோ சார்பதிவாளர் அலுவலகத்துக்கு போக வேண்டியது இல்லை என்கிற அந்த காலகட்டத்தில். போலியான ஆவணங்களை உருவாக்கி ஒருவரிடம் விற்க, அவர் அடுத்தடுத்தவர்களுக்கு விற்க இப்படியாகத் தொடர்ந்து கை மாறி இதுவரையிலும் ஐந்துக்கும் மேற்பட்ட கைகள் என்று மாறி சென்றுள்ளது.

 

நான் பொறுப்புக்கு வந்த பிறகு அரசு நில அளவை துறை மூலமாக, பதிவு செய்யப்பட்ட அத்தனை புல எண்களையும், சர்வே எண்களையும் பட்டியலிட்டு அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி, இந்த சர்வே எண்களில் இதுநாள் வரை என்னென்ன சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டது, வாங்கப்பட்டது என்றும் கோரியுள்ளோம். இனிமேல் எந்த விற்பனையும் வக்ஃபு வாரிய புல எண்களில் ஆவணங்களில் பதிவு செய்யக் கூடாது என என்று தடை வைத்திருக்கிறோம்.

 

இதன் மூலம் போலி பத்திரப்பதிவு செய்வதை இதன் மூலம் தடுத்து இருக்கிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மைதான். சர்வே எண் மாற்றம் செய்திருந்தால் அவர்களுடைய சொத்து என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தடையில்லா சான்று வழங்கி வருகிறோம். இனிமேல் வக்ஃப்  வாரிய சொத்துக்கள் யாருக்கும் விற்பனை செய்ய முடியாது. தமிழக முதல்வர் இதில் அரசியல் குறிக்கீடு இருக்காது என்பதை அறிவுறுத்தி, மிகத் துணிச்சலோடு செயல்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களையும் அபகரிக்கப்பட்ட இடங்களை மீட்டுக் கொண்டு வந்து, பொது மக்களுடைய பயன்பாட்டிற்கு தரவேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி எந்த குறுக்கீடும்  இல்லாமல் நிர்வாகம் சீராக நடந்து வருகிறது. வக்ஃபு வாரிய நிலங்களை கல்வி நிறுவனங்களாகவும், மருத்துவமனைகளாகவும், பயன்படுத்துவதற்கு முன் வாருங்கள் என்று எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறோம்'' என்றார்.

 

நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், ஜமாத் நிர்வாகிகள் ஜாகீர் உசேன், ஹலீம், முகமது ஜியாவுதீன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணைத்தலைவர் மூசா, நகர்மன்ற உறுப்பினர் தில்லை ஆர்.மக்கீன், தொழிலதிபர் எஸ்.ஆர்.ராமநாதன், மூத்த மருத்துவர் ஆர்.முத்துக்குமரன், மருத்துவர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்