தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்களில் வேந்தராக இருக்கும் ஆளுநரின் செயலாளர் ராஜாகோபால் இன்று தீடீர் என பாரதிதாசன் பல்கலைகழகத்திற்கு நிர்வாக ரீதியான சந்திப்பு நடப்பதாக செய்துள்ள அறிவிப்பு பெரிய சர்ச்சை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை மறுத்துள்ளார் ராஜகோபால்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் நேற்று அனுப்பிய சரக்குலர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில் ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் 29.08.2019 நமது பல்கலை கழகத்தில் நடைபெறும் சிறப்பு கூட்டத்திற்கு வர இருப்பதால் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் அழகான ஆடை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்பதுதான். பதிவாளரின் அந்த சர்க்குலர் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுகுறித்து பல்கலைகழ பேராசிரியர்கள் சிலரிடம் பேசிய போது..
இதற்கு முன்பு இப்படி ஒரு நடைமுறை இருந்ததில்லை ஆளுநரின் செயலாளர் என்பது உதவியாளர் என்கிற அந்தஸ்துதான் அவர் வேண்டுமானால் தனியாக துணைவேந்தர் சந்திப்பு நடத்தியிருக்கலாம் ஆனால் மாறாக ஆளுநரின் செயளாலருக்காக இப்படி ஒரு சந்திப்பு நடத்துவது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நீண்ட நாட்களாக தற்காலிக ஊழியர்களாக இருந்த 60 பேரை நிரந்தர பணியாளராக நாளை நியமித்து இருக்கிறார்கள். அதேபோன்று கடந்த ஜீலை மாதம் உதவி பேராசிரியர் - 26 பேர், இணை பேராசிரியர் 14 பேர், பேராசிரியர் 14 பேர் என 54 பணியிடங்கள் நிரப்படுவதற்கான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 9ம் தேதியோடு விண்ணப்பிக்கும் கெடு முடிந்த நிலையில் தற்போது விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்படும் நிலையில் இந்த ஆளுநர் செயலாளர் சந்திப்பு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள். பேராசிரியர்கள்.
இந்நிலையில் ஆய்விற்கு செல்லவில்லை என ஆளுநரின் தனி செயலாளர் ராஜகோபால் தனியார் சேனல் ஒன்றிற்கு விளக்கமளித்துள்ளார். அதேபோல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை நடக்கவிருந்த ஆலோசனை கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக்கூட்டத்திற்கு ஆளுநரின் தனி செயலாளர் செல்வது தமக்கு தெரியாது என ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சரும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.