கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலா தேவி உட்பட 3 பேர் ஆஜராகினர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்தியதாக பேராசிரியர் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் பேராசிரியர் நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்து விலகிக் கொண்டார்.
இந்நிலையில் இன்று (21/02/2020) வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 26ம் தேதி 3 பேரும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.