Skip to main content

பொதுகல்வியை சீரழிக்க முயற்சித்து வருகிறது மத்திய அரசு - விக்ரம் சிங்

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
Vikram Singh


மத்திய அரசு நாடு முமுவதும் உள்ள பொதுகல்வியை சீரழிக்க முயற்சித்து வருவதாக இந்திய மாணவர் சங்க அகில இந்தியா பொதுச்செயலாளர் விக்ரம் சிங் கூறியுள்ளார்.
 

    அனைவருக்கும் தரமான அறிவியல் பூர்வமான கல்வி பாகுபாடியின்றி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் மற்றும் அகர்தலா முதல் அகமதாபாத் வரையிலான பிரச்சார பயணம் தொடங்கியது. அகில இந்தியா தலைவர் ஷானு தலைமையிலான பயணத்தை கன்னியாகுமரியில் பொதுச்செயலாளர் விக்ரம் சிங் தொடங்கி வைத்தார்.
 

அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது,
 

2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்தனர். ஆனால் இதுவரை மோடி அரசால் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் எந்த ஒரு கல்வி கொள்கையும் வகுக்கபடவில்லை. மாறாக 2லட்சத்துக்கு அதிகமான பொதுப்பள்ளிகளை மூட தான் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொது கல்வி நிறுவனங்களை விட தனியார் கல்வி நிறுவனங்கள் சிறந்தவை என்ற தவறான வளர்ச்சிக்கு எதிரான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர்.
 

     ஜேஎன்யு, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் போன்ற பொதுகல்வி நிறுவனங்களை அழிக்க தனியார் நிறுவனங்களுக்கு முமு சுதந்திரம் அளிக்கிறார்கள். உயர்கல்வி நிறுவனங்களின் தேவைக்கேற்ப நிதி அளித்து உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் அமைப்பான பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு உயர்கல்வி நிதி ஆணையத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அவர்கள் தரமான கல்வியை உருவாக்கவில்லை. இப்படி பொதுகல்வியை நாடு முமுவதும் சீரழிக்க முயற்சிக்கிறார்கள்.
 

     மாநில பல்கலைகழகங்கள் மாநில அரசுக்கு சொந்தமானவை. மாநில அரசுகளுக்கு மாநில பல்கலைகழகங்களின் முpத உரிமையும் தனித்து இயங்கும் உரிமையும் உள்ளது. ஆனால் மத்திய அரசு இதற்கு எதிராக கல்வியை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வர முயற்சிக்கிறது. நீட் என்ற பெயரில் கல்வியை மத்திய அரசின் கீழ் கொண்டு வரும் முயற்சியை கைவிட வேண்டும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்