Published on 16/03/2025 | Edited on 16/03/2025

கம்பி வடிவிலான வாட்டர் ஹீட்டரை பயன்படுத்திய இளம் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவர் தன்னுடைய கணவர் குளிப்பதற்காக கம்பி வடிவிலான வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி நீரை சூடாக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த அஸ்வினியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.