Published on 09/12/2019 | Edited on 09/12/2019
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இன்று (09.12.2019) ஒரே நாளில் 3,217 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 2,834, கிராம ஊராட்சித் தலைவர் 333 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
அதேபோல் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 47, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 3 மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கலின் போது தாக்கல் செய்த உறுதி மொழி ஆவணம் www.tnsec.tn,nic,in என்ற தமிழ்நாடு மாநில தேர்தல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 16- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.