Published on 16/03/2025 | Edited on 16/03/2025

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் குளிரூட்டும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் மொத்தமாக 150 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென்று நேற்று நள்ளிரவு ஒன்று மற்றும் இரண்டாவது அலகில் குளிரூட்டும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறையில் இருந்த மின் வயர்கள் எரிந்து நாசமாகின. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை பரவ விடாமல் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.