Skip to main content

பாஜக, வியாபாரிகளை பகைத்துக் கொண்டதனால்தான் குஜராத்தில் வெற்றிபெற அவ்வளவு அவதிப்பட்டார்கள்... - ஏ.ம்.விக்கிரமராஜா

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழிகளுக்கு (பிளாஸ்டிக்) தடை என்று அறிவித்தது. மேலும் இதுவரை 12.50 மெட்ரிக் டன் நெகிழிகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும் ஒத்துழைக்க நினைத்தாலும் சில சமயங்களில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் ஏ.ம்.விக்கிரமராஜாவை சந்தித்து, வியாபாரிகளும், மக்களும் எதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் மற்றும் பல விஷயங்களைப் பற்றி பேசினோம். அதன் சுருக்க வடிவம் இது.

 

 

t

 

சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இது வணிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது?
 

தடை செய்யப்பட்ட நெகிழிகள் என்று அரசு அறிவித்திருக்கும் போதிலும் அதிகாரிகளுக்கு குழப்பம் நிலவி வருகிறது என்பது முதல் விஷயம். அடுத்தது மக்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பு இருப்பதை அறிய முடிகிறது. 

 

எல்லா நாடுகளிலும் நெகிழிகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த நாடுகள் எல்லாம் முறையாக அதனை கையாண்டு குப்பைகளை அகற்றிவருகிறது. ஆனால், இங்கு அந்த நிலை இல்லை. எங்கு பார்த்தாலும் குப்பைகளாகத்தான் இருக்கிறது. குப்பைகளை அகற்ற அரசு தவறியதால், மக்கள் மத்தியில் இதனால்தான் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறதோ என்று தோன்றுகிறது. இந்த 14 வகையான நெகிழி பொருட்கள் தடையை வியாபாரிகளாகிய நாங்களும் வரவேற்கிறோம். அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம். 

 


இது சிறு, குறு வியாபாரிகள் வணிகத்தில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
 


வியாபாரிகள் என்பதைவிட தயாரிப்பாளர்களை அதிகமாக பாதித்துள்ளது. நெகிழி தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஒன்றரை இலட்சம் தொழிலாளிகள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள். அதேசமயம், கடலை மிட்டாய், அப்பளம் போன்ற குடிசை தொழில்கள் அதிக அளவில் பாதிப்படைந்து இருக்கிறது. அதேபோல் எது தடை செய்யப்பட்ட நெகிழிகள் என்பது தெரியாமல் அரசு அதிகாரிகள் கடைக்குள் இருக்கும் நெகிழிகள் அனைத்தையும் கிழித்து எறிந்துவிட்டு அதற்கு 10,000 ரூபாய், 20,000 ரூபாய் என்று இலட்ச ரூபாய் வரை அபராதம் வேறு விதிக்கிறார்கள். 


முழுமையாக தடை என்றால் அரசு முதலில், தனது ஆவின் பால் கவர்களில் வராது அனைவரும் தூக்கு செட்டியில் வந்து வாங்க வேண்டும் என்று சொல்லட்டும். அதன் பின் நாங்களும் மனதார வரவேற்கப்போகிறோம். 

 

ஆவின் பால் கவருக்கு விதிவிலக்கு என்று அரசு அறிவித்துள்ளதே?
 

அப்போது எங்களுக்கும் விதிவிலக்கு கொடுங்கள், நாங்களும் இந்நாட்டு மக்கள்தானே. அரசுக்கு அளிப்பதுபோல்  சாமனியர்களுக்கும் விலக்கு அளிக்கலாம்.  உண்மையில் ஆவின் பால் கவர்கள் எல்லாம் மறுசுழற்சி செய்யக்கூடியது. அதனால்தான் எந்த பால் கவர்களும் தெருக்களில் கிடப்பதில்லை. மற்ற கவர்கள் எல்லாம் மறுசுழற்சி இல்லாததனால்தான் இந்த நிலைமை. அரசாங்கமே முறையாக செய்யாமல், அதேபோல் பன்னாட்டு வணிகர்களுக்கு சாதகமாக செயல்பட்டால், எங்கள்போல் உள்ளூர் வியாபாரிகள் நிலைமை என்னாவது.  முழுமையாக நலனை பாதிக்கக்கூடிய உணவுப்பொருளான குர்குரே கேடு விளைவிக்கும் உணவுப்பொருள்களில் முதல் இடத்தில் இருக்கிறது. இதுவெல்லாம் என்ன வகையான நெகிழியில் வருகிறது. 

 

பன்னாட்டு நிறுவனங்களுக்கு 2022 வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறதே?
 

பன்னாடடு நிறுவனங்களுக்கு 2022 வரை அவகாசம், அதே உள்நாட்டு வியாபாரிகளுக்கு 2018-வுடன் முடிந்துவிட்டதா. 

 

பன்னாட்டு குளிர்பானங்களுக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளதா?
 

பொதுமக்கள் பெரும்பாலம் புறக்கணித்துவிட்டார்கள். நாங்கள், நச்சுத்தன்மை கொண்ட குளிர்பானம் என்று சொல்லி நிறுத்துகிறோம். மேக் இன் இந்தியா என்று பாரத பிரதமர் சொன்னார். ஆனால், அரசு விழா, அமைச்சர் கூட்டம் போன்றவற்றில் அக்வாஃபினா தண்ணீர் பாடில்தான் இடம் பிடித்திருக்கும். அங்கு உள்நாட்டு குளிர்பானம் இடம் பிடித்திருந்தால் மரியாதையாக இருந்திருக்கும். நாங்கள் உங்களை ஏற்றுகொள்ள மாட்டோம் என்று சொன்னால் நீங்கள் வந்து சண்டைபோடுங்கள். நாங்கள், நீங்கள் சொல்வதில் எது ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறதோ அதனை ஏற்கொண்டுதானே இருக்கிறோம். எந்த அரசாங்கமும் வியாபாரிகளை பகைத்துக்கொள்ளக் கூடாது, பகைத்துக்கொண்டால் அது சரியாக வராது. பொறுத்திருந்து பாருங்கள், காலங்கள் மாறும். 

 


பாஜக வியாபாரிகளை பகைத்துக்கொண்டதனால்தான் குஜராத்தில் வெற்றிபெற அவ்வளவு அவதிப்பட்டார்கள். அதன் பின் பாஜகவின் தலைவரும் மோடியும் வியாபாரிகளை சந்தித்து நாங்கள் குறை தீர்ப்போம் என்று சொல்லி பல ஆயிரம் கோடிகளை ஜிஎஸ்டி என்ற வரி மூலமாக குறைக்கப்பட்டதற்கு பின்தான் பாஜக ஆட்சியில் இருக்கிறது, இதுதான் வரலாறு. 

 

நெகிழித்தடைக்கு அரசாங்கத்திடம் உங்கள் கோரிக்கை என்ன?
 

முதலில் தற்போது பறிமுதல் செய்யப்படும் நெகிழிகளுக்கு அபராதம் வசுலிக்கக்கூடாது. அடுத்தது, இருக்கும் நெகிழிகள் வேற்று மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டது அதனை திருப்பி அனுப்பினால் பணம் தரப்படும் என்று சொன்னால் அது அனைத்தையும் ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து சீல் வைத்து அனுப்பிவிடுங்கள் என்று ஒரு எச்சரிக்கையை கொடுங்கள். இரண்டாவது முறை வரும்போது உள்ளே இருக்கக்கூடாது என்று சொல்லுங்கள், மூன்றாவது முறை வரும்போதும் இருந்தால் அபராதம் விதியுங்கள். வியாபாரிகள் நெகிழிகளை பயன்படுத்துவது குற்றம் என்று தெரிகிற அரசுக்கு ஏன் 25 ஆண்டுகளுக்கு முன் அனுமதிக்கொடுத்த அரசாங்கம் அதனை ஆய்வு செய்து இதனை அனுமதித்தால் புற்று நோய் வரும் அதனால் இதற்கு அனுமதிகிடையாது என்று தடுத்திருக்க வேண்டும் அல்லவா. அவர்கள் செய்தால் குற்றமில்லை நாங்கள் செய்தால் குற்றமா. நாஙகள் பசிக்காக செய்கிறோம், அவர்கள் அதிகாரத்தில் செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நெகிழி ஒழிப்பு என்பது படிப்படியாக கொண்டுவர வேண்டும். அப்படியிருந்தால், உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் வாழ்வார்கள். அதேபோல் வாடிக்கையாளர்களும் வாங்குவார்கள். அரசு தற்போது நெகிழியை தடை செய்துவிட்டார்கள், அதற்கு மாற்றாக மக்கும் தன்மைகொண்ட பொருள் கிடைத்திருக்க வேண்டும், அதனை அரசிடம் கொடுத்து அனுமதிபெற்றிருக்க வேண்டும், அரசு அதனை நூறு சதவீதம் மக்கக்கூடிய பொருள் என்று சொல்ல வேண்டும், அதன் பிறகுதான் சந்தைக்கு விற்பனைக்கு வரும், அதன் பிறகுதான் மக்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கும். ஆனால் முறையான மாற்று பொருள் இன்னும் கிடைக்கவே இல்லை. 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ( படங்கள்)  

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் மே மாதம்  5 ஆம் தேதி வணிகர் தின மாநாடு ஈரோட்டில் நடைபெறுவதை முன்னிட்டு, வணிகர்களின் ஈடுபாடு குறித்த சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (17.03.2023) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

 

Next Story

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் கைப்பற்றிய பணங்களை தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு பயன்படுத்த வேண்டும் - விக்கிரமராஜா பேட்டி

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் விக்கிரம ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். 

 

vikiramaraja

 

பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்து நேர்காணல் அளித்த போது கூறியதாவது, தேர்தல் ஆணையர்கள் கைப்பற்றிய பணங்கள்,  நகைகள்,  பாத்திர பண்டங்கள் எல்லாம் வணிகர்கள் உடையன.  அதை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தேர்தல் ஆணையம் திருப்பி வழங்க வேண்டும்.அதற்கு மேலாக தமிழகத்திலேயே கைப்பற்றப்பட்ட பணங்களை தமிழகத்தினுடைய நீர் ஆதாரத்தை பெருக்கும்வகையாக ஏரி, குளங்களைச் சீரமைத்து இங்கு நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு அந்த பணத்தை நேரடியாக பயன்படுத்தி செயல்படுத்த வேண்டும்.
 

  
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது எங்களது இந்த மாநாட்டிற்குப் பிறகு பதினெட்டாம் நாள் தேர்தல் தீர்ப்பு வர இருக்கிறது.  இதற்கு இடையில் கடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் நாங்கள் பல்வேறு பிரச்சனைகளை கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த போராட்டத்திற்கு இன்னமும் தீர்வு கிடைக்கப் பெறவில்லை.  ஆனால், பாரதப் பிரதமர் அகில இந்திய வணிகர் மாநாட்டிலே வணிகர்களின் பிரச்சனைகளை முழுமையாக தீர்ப்பேன் என்று உறுதி அளித்து இருக்கிறார்.  
 

அதே போன்று காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பு முழுமையாக மாற்றி அமைக்கப்படும். பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்  என்று சொல்லி இருக்கிறார்.  இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்கும் இந்த மாநாடு என்பது எங்களுடைய தொடர் போராட்டங்களின் அடிப்படையில்  தொடர்ச்சியாக வரக்கூடிய அரசு எங்களை அழைத்துப் பேசி தீர்வு ஏற்படவில்லை என்று சொன்னால் தொடர் போராட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை முடிவெடுத்திருக்கிறது.  
 


அதேபோன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இங்கு ஒரு லட்சம் கோடிக்கும் மேலாக ஜிஎஸ்டி மூலம் வருவாய் ஏற்பட்டால் தமிழகத்தில் மட்டுமல்ல, இருக்கின்ற டோல்கேட்டுகளை உடனடியாக அப்புறப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ஆனால் ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடியை தாண்டி ஜிஎஸ்டி வரிவிதிப்பு வசூலிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு கொண்டிருக்கிறது.  அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. அவர் வாக்குறுதி அளித்ததுபோல சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.  சிறு சாலைகளில் கூட சுங்கச்சாவடி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்துகிறது என்று கூறினார்.