கரூர் தொழிற்பேட்டையில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் குடோன் உள்ளது. திடீர் என திருச்சியிலிருந்து லஞ்ச ஒழிப்புதுறை போலிஸ் இன்ஸ்பெக்டர் ரத்னவள்ளி மற்றும் சுலோச்சனா தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலிஸ் அதிரடி சோதனையில் இறங்கினார்கள். டாஸ்மாக் மேலாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டவர்களிடம் கேள்விகேட்டு துளைத்தெடுத்தனர். அலுலகத்தில் உள்ள பீரோவில் உள்ள ஆவணங்களை எல்லாம் எடுத்து ஆய்வு செய்தனர். டாஸ்மாக் குடோன்களில் உள்ள இருப்பு குறித்தும் ஆய்வு நடத்தினார்கள். இதே போல் அலுவலகத்தையே தலைகீழாக புரட்டி போட்டனர்.
தீபாவளியை முன்னிட்டு மதுபானங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து டாஸ்மாக் அலுவலர்களுக்கு அன்பளிப்பு, லஞ்சம் கொடுத்திருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
இதன் அடிப்படையில் தீபாவளி அன்பளிப்பு கொடுத்த வரவு செலவு நோட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்கள் என்கிறார்கள். இரவு நள்ளிரவு வரை நீடித்ததாம். இதுவரை கைப்பற்றிய ஆவணங்கள் குறித்த எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் டாஸ்மாக் மேலாளர் ஐய்யப்பன் வேறு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தீபாவளியை முன்னிட்டு அதிக தொகைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை தீடீர் ஆய்வு செய்துள்ளார். கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் காலையிலிருந்து மாலைவரை ஆய்வு செய்த நேரத்தில் விஜிலன்ஸ் உள்ளே நுழைந்து சோதனை செய்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.