Skip to main content

ஆளுநர் மாளிகை அருகே மரம் விழுந்ததில் காவலர் காயம்!

Published on 28/11/2024 | Edited on 28/11/2024
A guard was incident when a tree fell near the Governor House

ஆளுநர் மாளிகை அருகே மரம் விழுந்ததில் காவலர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வழக்கம் போல் நந்தினி என்ற காவலர் மெயின் கேட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் ஆளுநர் மாளிகை அருகே உள்ள மரம் முறிந்து விழுந்தது. இதில் சிக்கி காவலர் நந்தினி காயமடைந்துள்ளார். கையில்  காயம் அடைந்த மருத்துவர் நந்தினி சைதாப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்