![ிுப](http://image.nakkheeran.in/cdn/farfuture/swbizCW0Q-GP8roICJRkt6OPZCFpT-8LA6PvDXNcokQ/1613991085/sites/default/files/inline-images/789_4.jpg)
புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அவர் வழங்கினார்.
ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ள தி.மு.க.வின் வெங்கடேசன், "புதுச்சேரி அரசால் தட்டாஞ்சாவடி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. தொகுதிக்கு எதுவும் செய்ய முடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியும்? சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தி.மு.க. தலைமையிடம் கூறிவிட்டேன். சட்டமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமே ராஜினாமா செய்தேன். தி.மு.க. கட்சியிலிருந்து விலகவில்லை" எனத் தெரிவித்தார். இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.