Skip to main content

கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மகளிர் ஆணையம் விசாரணை

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

 State Commission for Women Inquiry at Kalashetra College

 

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பயிற்சியாளர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி ஒருவர் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ''ஒரு மெயின் சீனியர் ஸ்டாப். அவர் பெயர் ஹரிபத்மன். அவரை இங்கே தங்க வைத்து வீடு எல்லாம் கொடுத்து மரியாதை செலுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவருக்கு தகுதியே கிடையாது. அவர் எங்கள் பிள்ளைகளுக்கு வார்த்தைகளால் தொல்லை கொடுக்கிறார். பாலியல் தொல்லை கொடுக்கிறார். பார்க்கின்ற பார்வையே சரியில்லை. இன்னும் 3 பேர் இருக்காங்க சஞ்சிதலால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணன். சஞ்சிதலால் பசங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார். மிச்சம் இரண்டு பேர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள்'' என்றார். 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்த கொடுமைகள் நடைபெற்று வருவதாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருக்கும், மத்திய கலாச்சாரத்துறைக்கும் மாணவிகள் ஆன்லைன் மூலம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

 

இதுவரை எழுத்துப்பூர்வமாக மாணவிகள் யாரும் புகார் அளிக்கவில்லை என்று சென்னை கூடுதல் காவல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி கல்லூரி வளாகத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள மாணவிகளிடம் அவர் விசாரணை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல் இன்று மாலைக்குள், மாணவிகள் போலீசாருக்கு எழுத்துப்பூர்வமாகப் புகாரளிக்கப் போவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்