மோடிக்கு உடந்தையாக ஐந்தாம்படை-அடியாட்படை வேலையைச் செய்கிறது ஈபிஎஸ்-ஓபிஎஸ் பெயரிலான அரசு என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக வரலாற்றில் என்றுமே இல்லாத ஓர் ஐந்தாம்படை மற்றும் அடியாட்படை அரசாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் பெயரிலான அரசு!
இதன் முழு கட்டுப்பாடும் ஆளுநரின் கையில்; அதனாலேயே இங்கு ஆபாச களியாட்ட ஐபிஎல் போட்டி, அந்த ஆபாச ஐபிஎல் வியாபாரி சொடுக்கடித்ததுமே துணை ராணுவம் வருகை, பல்கலைக்கழக துணைவேந்தராக வெளிமாநில ஆர்எஸ்எஸ் மேல்சாதியர் நியமனம், தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டில் தமிழகம் கலந்துகொள்ளாமை என இத்யாதிகள்!
இதனை வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, "ஆளுநரே தமிழகத்தை விட்டுப் போ; மோடி அரசே தமிழக ஆளுநரை திரும்பப்பெறு; தமிழக அரசே ஆளுநரின் துணைவேந்தர் நியமனங்களை ரத்து செய்” என வலியுறுத்துகிறது.
இதில் நடவடிக்கை எடுக்க, அனைத்து தமிழக சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து செயலில் இறங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்க மத்திய பாஜக மோடி அரசு, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றம் மூன்றும் இணைந்து சதித் ”திட்டம் (Scheme)” தீட்டிச் செயல்படுகின்றன.
இதில், பொருளியல் குற்றப் பின்னணி உடைய ஈபிஎஸ்-ஓபிஎஸ் அமைச்சரவை தன்னை தற்காத்துக்கொள்ள மோடிக்கு உடந்தையாக ஐந்தாம்படை-அடியாட்படை வேலையைச் செய்கிறது.
அதன் விளைவுதான் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆபாச களியாட்ட ஐபிஎல் போட்டி!
அதற்குப் பாதுகாப்பாக 5,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர குவிப்பு!
மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அதைத் தள்ளி வை என்று சொன்னவர்கள் மீது தடியடி!
இவை மட்டுமல்ல; சொடுக்கடித்துக் கூப்பிட்டே துணை ராணுவத்தை வரவழைக்கிறார் அந்த ஆபாச ஐபிஎல் வியாபாரி.
ராணுவம் வரவேண்டுமென்றால், மிகவும் நெருக்கடியான நிலையில் மாநில அரசு கோர வேண்டும்; தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன உறுப்பு அமைப்புகள் தவிர்க்க முடியாத சூழல்களில் கோர வேண்டும்; இல்லையென்றால் ரொம்பவும் மோசமான நெருக்கடிகளை சமாளிக்க மத்திய அரசே அனுப்ப வேண்டும்.
ஆனால் இதில் எந்தக் காரணங்களும் சூழல்களும் இல்லாமலே ஒரு தனியார் ஆபாச ஐபிஎல் வியாபாரி சொடுக்கடித்துக் கூப்பிட்டே துணை ராணுவத்தை வரவழைக்கிறார் என்றால் இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
இத்தகைய நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நிகழ்கின்றன என்றால், அது தமிழக வரலாற்றில் என்றுமே இல்லாத ஓர் ஐந்தாம்படை மற்றும் அடியாட்படை அரசாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் பெயரிலான அரசு இருப்பதாலும், அதன் முழு கட்டுப்பாடும் ஆளுநரின் கையில் இருப்பதாலும்தான் அல்லவா?
அதனால்தான் காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக இங்கு ஆபாச களியாட்ட ஐபிஎல் போட்டி!
அந்த ஆபாச ஐபிஎல் வியாபாரி சொடுக்கடித்ததுமே துணை ராணுவம் வருகை!
பல்கலைக்கழக துணைவேந்தராக வெளிமாநில ஆர்எஸ்எஸ் மேல்சாதியர் நியமனம்!
தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டைப் புறக்கணித்து தமிழகம் அதில் கலந்துகொள்ளாமை என இத்யாதிகள்!
இதனை வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, "ஆளுநரே தமிழகத்தை விட்டுப் போ! மோடி அரசே தமிழக ஆளுநரைத் திரும்பப்பெறு! தமிழக அரசே ஆளுநரின் துணைவேந்தர் நியமனங்களை ரத்து செய்!” என வலியுறுத்துகிறது.
இதில் நடவடிக்கை எடுக்க அனைத்து தமிழக சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து செயலில் இறங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்.