![Vellore student topper in Tamil Nadu with 497 marks out of 500 in CBSE 12th exam](http://image.nakkheeran.in/cdn/farfuture/Su-MhfJpXrBMapXy2Vs5OA_Umv6yURGvgvbPJKz1vPU/1683959753/sites/default/files/inline-images/th_4119.jpg)
நடந்து முடிந்த 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பள்ளிகளின் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இதில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஷிருஷ்டி என்கிற தனியார் பள்ளியை சேர்ந்த ரேஹா சுந்தரேசன் ராஜ் என்ற மாணவி 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்களும் ஆங்கிலம், கணிதம், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 100க்கு தலா 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டு ஷிருஷ்டி பள்ளி குழும தலைவர் சரவணன் உட்பட ஆசிரியர்கள் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர். தனது உயர்வுக்கு காரணமான ஆசிரியர்களுக்கு மாணவி நன்றி தெரிவித்துக்கொண்டார். மாநில அளவில் 2வது இடத்தில் சென்னை பத்ம ஷேஷாத்ரி பள்ளியியும், 3வது இடத்தில் கோபாலபுரம் DAV பள்ளியும் வந்துள்ளன.