Skip to main content

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி!

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கண்டிபேடு கிராமத்தை சேர்ந்த 26 வயதான தங்கராஜ், தனது மனைவி மற்றும் 2 வயது மகள் கீதாஞ்சலி மூவரும், இருசக்கர வாகனத்தில் காட்பாடி நோக்கி சென்றனர். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தங்கராஜ், அவரது மகள் கீதாஞ்சலி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

 

இந்த வழக்கு கடந்த 5 வருடங்களாக ராணிப்பேட்டை கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2018- ஆம் ஆண்டு இறந்தவருக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகை ரூபாய் 5 லட்சத்து 25 ஆயிரம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



 

vellore ranipet court order bike incident Compensation for the family of the deceased govt bus japti

 

தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டை கடந்தும் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தார், நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனையடுத்து அரசு பேருந்தை ஜப்தி செய்ய கூடுதல் அமர்வு நீதிபதி முகமது ஜியாபுதின் உத்தரவிட்டார்.

 

அதன்பேரில் வேலூர் மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த புதிய பேருந்து ஒன்றினை நீதிமன்ற ஊழியர்கள் வந்து ஜப்தி செய்து, நஷ்ட ஈடு வழங்க வேண்டிய குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். இதனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விவகாரத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்களுக்கு தரவேண்டிய நஷ்ட ஈடு தொகையை வழங்கி பேருந்தை மீட்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.



 

சார்ந்த செய்திகள்