Published on 30/08/2023 | Edited on 30/08/2023
![Velankanni Cathedral Anniversary](http://image.nakkheeran.in/cdn/farfuture/m_rHPGkTpuQabH-xuCzs_4P2AFe162ujukomT92f0wM/1693375931/sites/default/files/inline-images/1001_59.jpg)
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக நள்ளிரவிலிருந்து தொடர்ச்சியாக இடைவெளியின்றி பக்தர்கள் வந்த வண்ணமாக உள்ளதால், எங்கு பார்த்தாலும் கூட்டமாக உள்ளது.
விரதமிருந்த பக்தர்கள் பலரும் பாத யாத்திரையாக விடிய விடிய இருளையும் பொருட்படுத்தாமல், மாதாவின் புகழ் பாடியபடி வேளாங்கண்ணி நோக்கி தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர். பக்தர்களின் கூட்டத்தால் தங்கும் விடுதிகள் பெரும் அளவில் நிரம்பியதால் பலரும் மரத்து நிழலில் இளைப்பாறி வருகின்றனர்.