
அண்மையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த தமிழக ஆளுநர் மூலவர் மற்றும் தாயாரை தரிசனம் செய்த பிறகு தாயார் சன்னதி முன்பு, "ஸ்வட்ச் தீர்த்" எனப்படும் புனித ஸ்தல தூய்மை பணியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து, தமிழக ஆளுநர் ரவி செய்தியாளர்களிடம் கூறியபோது, "அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட இருப்பது, நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதற்கு காரணம், ராமர் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. தூய்மைப் பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். வீடுகள், கோயில்கள் மட்டுமல்ல, நாம் பொது இடங்களிலும் தூய்மை பேண வேண்டும்" என்றார்.

இதேபோல இன்று கோவையில் ஸ்ரீ கோனியம்மன் திருக்கோவிலுக்கு வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அங்குள்ள நிர்வாகிகளுடன் சேர்ந்து கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். துடைப்பத்தை எடுத்து அங்கிருந்த குப்பைகளை கூட்டி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார்.