தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
தமிழ்நாட்டில் தூத்துகுடி மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்தி வந்த நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. ஆலையை மூட வேண்டிய தமிழக அரசு 13 உயிர்களை பழி வாங்கியது. பின்னர் அரசே ஆலையை மூடி சீல் வைத்ததோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.
இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக சமரசமின்றி மக்கள் போராட்டத்தையும், சட்டப் போராட்டத்தையும் நடத்தி வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தமிழக அரசின் வழக்கு இறுதி விசாரனை முடிவடைந்த நிலையில் தீர்ப்பும் வேதாந்தாவிற்கு சாதகமாக வந்து விடுமோ என அரசும், பொதுமக்களும் அச்சமடைந்த நிலையில் நீதிமன்றத்திற்குள் சென்ற வைகோ நீதிபதிகளிடம் முன்வைத்த தனது கடுமையான வாதத்தால் அறிவிக்கும் நிலையிலிருந்த தீர்ப்பையை நிறுத்தி வைத்தது.
இதனால் நீதிபதிகளே அதிர்ச்சி அடையும் நிலையை உருவாக்கியது. உலகமே வியந்தது. இதுவே உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறை என்ற நிலையை உருவாக்கியது. இந்திய அரசியலில் அசைக்க முடியாத ஜாம்புவான் வைகோ என்ற அதிர்ச்சியை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியது.
இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்து மூடியதை உறுதி படுத்தி உள்ளதை விவசாயிகள் சார்பில் வரவேற்கிறோம். தமிழக அரசுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசின் தமிழக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், திருக்கார வாசல், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் பேரழிவு திட்டங்கங்களுக்கு எதிராகவும், காவிரி உரிமை மீட்பிற்கும் பாராளுமன்றத்தில் சமரசத்திற்கு இடமின்றி குரல் கொடுத்து தமிழக உரிமைகளை மீட்கும் வகையில் வைகோ அவர்களை பொது வேட்பாளராக அறிவித்து வெற்றி பெற செய்வது நம் அனைவரின் கடமை என்பதை உணர்ந்து அரசியல் கட்சிகள் உதவிட முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.