![tn govt555](http://image.nakkheeran.in/cdn/farfuture/NIbEnpOx4VWv9rckBudua1iym5zeifVy9d790y2zbu4/1643450341/sites/default/files/2022-01/e333222.jpg)
![tn govt444](http://image.nakkheeran.in/cdn/farfuture/a4uliKXzl3ThKmPAOpaYymXS4XEFZTiyd3scdO0xBi4/1643450341/sites/default/files/2022-01/eeeeeee.jpg)
Published on 29/01/2022 | Edited on 29/01/2022
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, 33 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 22 வருவாய் அலுவலர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தேர்தல் பார்வையாளராக மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ்., தட்க்ஷிணாமூர்த்தி ஐ.ஏ.எஸ்., லட்சுமி ஐ.ஏ.எஸ்., அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ்., நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ்., கோவிந்த ராவ் ஐ.ஏ.எஸ்., ஜான் லூயிஸ் ஐ.ஏ.எஸ்., மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்., ரத்னா ஐ.ஏ.எஸ்., கிளாட்ஸ்டோன் புஷ்பா ஐ.ஏ.எஸ்., வளர்மதி ஐ.ஏ.எஸ்., பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ்., கற்பகம் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.