Published on 05/02/2021 | Edited on 05/02/2021
![university of madras students online class continue](http://image.nakkheeran.in/cdn/farfuture/S0odq7JVmOB1520Fvy36HWoAbgzlx8ljWJWyIgat_Wo/1612525514/sites/default/files/inline-images/m322.jpg)
சென்னை பல்கலைக்கழக வகுப்புகள் தொடர்ந்து ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை பல்கலைக்கழக வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே தொடர்ந்து ஜூன் மாதம் வரை நடைபெறும். ஜூன் மாதத்திற்குப் பிறகே நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். செய்முறை தேர்வுகளுக்காக மட்டுமே மாணவர்கள் நேரடியாக வரலாம். சந்தேகங்களை ஆசிரியர்களிடமோ, பல்கலைக்கழகம் வந்தோ மாணவர்கள் கேட்கலாம். மாணவர்களுக்கு தரமணியில் விடுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.