Skip to main content

ஆட்சியர் அதிரடி - குண்டாஸில் கைதான பலே திருடர்கள்!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

Two arrested by Collector's Order

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக  முசிறியை சேர்ந்த செல்வக்குமார், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த சங்கர் ஆகியோரை திருவெறும்பூர் காவல்துறையினர் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.

 

இந்த நிலையில் இருவரும் வெளியே வந்தால் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரை செய்துள்ளார். அதன்பெயரில் செல்வகுமார், சங்கர் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்