திருச்சி செல்வதாக இருந்த டிடிவி தினகரனின் இன்றைய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நாளை டிடிவி தினகரன் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெஞ்சுவலி காரணமாக சசிகலா கணவர் ம.நடராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் டிடிவி தினகரனின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.