கடைமடை விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதற்கு வாய்க்கால்களை தூர்வாராமல் அதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை சுருட்டிக்கொண்ட அதிமுக அமைச்சர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளுமே காரணம் என குற்றம்சாட்டினார் அ.ம.மு. கட்சியை சேர்ந்த டிடிவி.தினகரன்.
மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வேளாங்கண்ணியில் தொடங்கினார். அவருக்கு அக்கட்சி தொண்டர்கள் மேளதாளத்துடன் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.
புரட்சிப்பயணத்தில் பேசிய டிடிவி.தினகரன். “நாகை மாவட்டத்திற்கு இதுவரை மேட்டூர் அணை திறக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும், காவிரி நீர் இதுவரை கடைமடைக்கு சரிவர வந்து சேரவில்லை. தண்ணீரை நம்பி விதைக்கப்பட்ட பயிர்களும், நடவு செய்த பயிர்களும் கருகிவருகிறது, இதனை கண்டு இதுவரை இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது வேதனை அளிக்கிறது. விவசாயிகளின் உயிரிழப்புக்கு காரணம் வாய்க்கால்களை முறையாக தூர்வாராததும், தூர்வாரியதாக பணத்தை அதிமுகவினரும், அதிகாரிகளும் தங்களின் பையில் போட்டுகொண்டதே காரணம்.
தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றால் வருகின்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்திற்கு வாக்களித்து இந்த அடிமை ஆட்சியை அகற்றவும், இரட்டை இல்லை சின்னைத்தை மீட்கவும் அனைவரும் தாயராக இருக்கவேண்டும் ." என்று பேசிமுடித்தார்.
பிரச்சார பயணத்தால் தொண்டர்களின் வாகனங்கள் தாருமாறாக ஓட்டியக்காரனத்தால் வேளாங்கன்னியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.