Skip to main content

திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி; சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்

Published on 23/03/2025 | Edited on 23/03/2025
Truck suddenly catches fire; driver acts skillfully

மதுரை வாடிப்பட்டியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை வாடிப்பட்டி அருகே மதுரை-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மண் ஏற்றிக்கொண்டு சென்ற டாரஸ் லாரி ஒன்று நாகர்கோவிலில் இருந்து சேலம் நோக்கி செல்லும் பொழுது குலசேகரன்பிரிவு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென லாரியின் பின் பக்க டயர் வெடித்துள்ளது.

பின் பகுதியில்  தீப்பிடிக்க தொடங்கியது. உடனடியாக தீயானது லாரி முழுவதும் பரவியதால் சாமர்த்தியமாக சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறையினருக்கு ஓட்டுநர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தாலும் லாரியின் பின்பக்கம் முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்