Skip to main content

ரயில்வே பயிற்சி நிறுவனத்தில் அம்மை நோய் பரவல்; மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

trichy railway training centre students related incident action taken by trichy corporation 

 

திருச்சி ரயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் 420 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் மொத்தம் 14 பேருக்கு அம்மை நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்பது பேரை ரயில்வே நிர்வாகம் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மீதமுள்ளவர்கள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்று திருச்சி கோட்ட செயலாளர் வீர சேகரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இதனையொட்டி இன்று மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கான உணவு மற்றும் இணையதளம் மூலம் வழங்கக்கூடிய பயிற்சி வகுப்புகள், மருந்துகள் உள்ளிட்டவை சரியாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "ரயில்வே நிர்வாகம் அம்மை நோய் பாதித்தவர்களை இங்கு வைத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்காமல் வீட்டிற்கு அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. ஆனால் மாநகராட்சி மேயர் அன்பழகன் இந்த தகவல் அறிந்து பயிற்சி மையத்தில் ஆய்வு நடத்தி இங்கு இருக்கக்கூடிய மாணவர்களை பரிசோதனை செய்து அம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடிய மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

அம்மை நோய் பாதிப்பை தொடர்ந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவர்களால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இருப்பினும் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் மற்றும் மற்ற பயிற்சி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் ரயில்வே நிர்வாகம் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்