Skip to main content

"பெற்ற பிள்ளைகளைத் தேடிச் சென்றால் யாசகம் பெறும் காசை கொடு என வற்புறுத்துகின்றனர்" - யாசகர் ஆதங்கம்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

trichy old man donate chief minister public relief fund donation

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் யாசகர்  பூல்பாண்டி என்பவர் யாசகம் எடுத்து 10 ஆயிரம்  ரூபாய் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

 

இவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுவரை 4 முறை நிதி வழங்கியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் யாசகம் எடுத்து தன்னால் முடிந்த நிதி உதவியை அரசு பள்ளி மற்றும் முதியோர் இல்லங்களுக்கு மட்டுமின்றி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்து வந்துள்ளார்.

 

பூல்பாண்டி பேசுகையில், "இதுவரை பொது நிவாரண நிதிக்கு 50 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளேன். பெற்ற பிள்ளைகளை தேடிச் சென்றால் யாசகம் எடுத்த பணத்தை எங்களிடம் கொடு என்று வற்புறுத்துகிறார்கள். எனவே, அவர்களை தேடி செல்வதில் விருப்பம் இல்லை. மக்கள் நலனுக்காக யாசகம் பெறுகிறேன்" எனக் கூறுகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்