திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னிரண்டு நாள் யோகா பயிற்சி பயிலரங்கின் நிறைவு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பு.சு.விஜயலட்சுமி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் கா.வாசுதேவன் நோக்க உரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.வெற்றிவேல், திருச்சிராப்பள்ளி ரெட்கிராஸ் தலைவர் பொறிஞர் ராஜசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.
யோகா மன்றப் பொறுப்பாளர்கள் முனைவர் சசிகலா, முனைவர் சீதாலட்சுமி பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவியரை வாழ்த்திப் பேசினர். மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கிய கே.கே. நகர் மன வளக் கலை மன்றப் பேராசிரியர்கள் சுப்பிரமணியன், சந்திரசேகர், பார்த்திபன், பொற்கொடி, ஹேமாவதி, வள்ளி, விமலா, ராதிகா ஆகியோரை கல்லூரி முதல்வர் பாராட்டினார். முன்னதாக யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும் திருச்சி மாவட்ட பொறுப்பாளருமான முனைவர் இரா.குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர் நா.பிரியா நன்றியுரை நவில, முனைவர் கி.மைதிலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.