Published on 09/05/2023 | Edited on 09/05/2023
![trichy central jail special camp mobile phone recovered issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/8yp-xAIq8ORJ6Z5GyAg3B0eI_UMJGlktLymExmYNHOc/1683633202/sites/default/files/inline-images/spl-camp-art.jpg)
திருச்சி மத்திய சிறையின் சிறப்பு முகாமில் இருந்தவர்களிடம் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் ஸ்ரீதேவி மற்றும் அன்பு ஆகியோர் தலைமையில் 350 போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முகாமிற்குள் தங்க வைக்கப்பட்டுள்ள அனைவரது உடைமைகளும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அங்கு இருந்த முகாம் வாசிகளிடம் இருந்து நான்குக்கும் அதிகமான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.