![Tribute to the R. Krishnamurthy, former editor of Dinamalar daily](http://image.nakkheeran.in/cdn/farfuture/JX8gNrf0kO0DNd1Ov669PdRfUdX4nsLCAll990Z4z4k/1614932010/sites/default/files/2021-03/wrw3.jpg)
![Tribute to the R. Krishnamurthy, former editor of Dinamalar daily](http://image.nakkheeran.in/cdn/farfuture/u8e8DF-GP6qUJFMjrANnAxXcXAtOQInZwAWW6--K3A4/1614932010/sites/default/files/2021-03/66.jpg)
Published on 05/03/2021 | Edited on 05/03/2021
தினமலர் நாளிதழின் ஆசிரியராக 40 ஆண்டுகள் பணியாற்றிய ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அவருடைய 88 ஆவது வயதில் நேற்று (04.03.2021) காலை காலமானார். பத்திரிகை துறையோடு மட்டுமல்லாமல், பழந்தமிழர்க்கால நாணயங்கள் குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்ட ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அது தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். கணினி பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் தமிழ் எழுத்துக்களை உருவாக்கியதிலும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கப் பெற்றதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நக்கீரன் ஆசிரியர் நேரில் சென்று மறைந்த தினமலர் நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.