Skip to main content

“உங்கள் வீட்டு பிள்ளை நான்” - எதிர்கட்சியினருக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த டி.ஆர்.பி. ராஜா

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

TRB Raja met traders members

 

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவருமான டி.ஆர்.பி. ராஜா, நகராட்சி மேம்பாடு குறித்து அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்க, சேவை சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, “கட்சி வேறுபாடு என்பதெல்லாம் தேர்தலோடு சரி, ஆனால் அதற்குப் பிறகு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் தான் ஊர் உருப்படும் என்பதை முழுமையாக அன்றைக்கும் நம்புகிறவன், இன்றைக்கும் நம்புகிறவன். அதனால் இன்று எதிரணியில் இருக்கும் யாராக இருந்தாலும் நிச்சயமா அவங்களுக்காக நான் துணை நிற்பேன். நீங்கள் எல்லோரும் துணை நிக்கணும்னு நானும் எதிர்பார்ப்பேன். 

 

தேர்தல் முடிஞ்சாச்சு, மீண்டும் மக்கள் பணி தொடங்கியாச்சி. மக்கள் பணியில் தனிப்பட்ட ஒரு இயக்கமோ தனிப்பட்ட ஒரு நபரோ என்றுமே எதையும் பெரிதாகச் சாதித்து விட முடியாது என்பதை நான் முழுமையாக நம்புபவன். முதலில் என்னுடைய கோரிக்கை அனைத்து கட்சியினரும் நம்முடைய பெருமை வாய்ந்த மன்னார்குடியை மின்ன வைக்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் உதவியும் தேவை.

 

நமக்குள் நடந்த அரசியல் பேச்சுகளையும் விருப்பு வெறுப்புகளையும் தேர்தலுடன் முடித்துக்கொண்டு மன்னார்குடியின் முன்னேற்றம் என்னும் ஒற்றை புள்ளியில் நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டிய தருணமிது. நீங்கள் நிச்சயமாக உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒத்துழைக்க வேண்டுமென்றும் விரும்புகின்றேன். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை தான், உங்கள் தம்பி தான், உங்க கூட இருந்தவன் தான், உங்க கூடவே வளர்ந்தவன் தான், நான் கேட்பதனால் எதுவும் குறைந்திட போவதில்ல. வீடு தேடி வந்து அதிமுக நண்பர்களாக இருந்தாலும் சரி, அ.ம.மு.க நண்பர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியினராக இருந்தாலும் சரி, எதிரணியில் எங்களிடம் மிக கடும் போட்டியாளராக இருந்தவர்கள் ஆனாலும் சரி, நான் வீடு தேடி வந்து உங்களிடம் கோரிக்கை வைக்கத் தயாராக இருக்கிறேன். இந்த மன்னார்குடியை மின்ன வைக்க எந்த ஒரு லெவலுக்கும் வரத் தயாராகவே இருக்கிறேன். நிச்சயம் மன்னையை மின்ன வைத்துக் காட்டுவேன். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்