Published on 29/03/2020 | Edited on 29/03/2020
கரோனா தடுப்பு நடவடிக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை தமிழக அரசிற்கு திமுக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வழங்கியுள்ளார்.
![DMK Dayanidhimaran give 1 crore fund](http://image.nakkheeran.in/cdn/farfuture/Hb1vR5p52fmYw-GDXMwSQH3AU8BzquYIXRxpa6myKxw/1585468187/sites/default/files/inline-images/cfvvbvbvbvb.jpg)
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு தரப்பினரும், பிரபலங்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். அதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன் 50 லட்சம் ரூபாயும், வேலூர் திமுக எம்பி கதிர் ஆனந்த் ஒரு கோடி ரூபாயும் நிதி உதவி அளித்துள்ளனர்.